உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

குமரியில் தொடர் மழை ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் வேலை இழப்பு – அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், ரப்பர் தோட்டங்களில் பால் வடிக்கும் பணி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், ரப்பர் தோட்டங்களில் பால் வடிக்கும் பணி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரப்பர் உற்பத்தி குறைந்து, தோட்டத் தொழிலாளர்கள் வேலை இழப்பையும், விவசாயிகள் வருவாய் இழப்பையும் சந்தித்து வருகின்றனர்.

Team - Editorial

பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
குமரியில் தொடர் மழை ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் வேலை இழப்பு – அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக ரப்பர் தோட்டத் தொழில் இருந்து வருகிறது. இந்நிலையில், தொடர் மழையால் மரங்களில் இருந்து ரப்பர் பால் வடிப்பது தடைபடுவதுடன், ரப்பர் ஷீட் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரப்பர் நிறுவனங்களுக்கு தேவையான மூலப்பொருட்களை அனுப்புவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து,பெரிய ரப்பர் தோட்டங்களில் மழைக்காலங்களில் தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட அளவு ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால் சிறிய ரப்பர் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மழை நாட்களில் வருமானம் கிடைப்பதில்லை. எனவே, தொடர் மழையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று சிறிய ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என சிறு ரப்பர் தோட்ட தொழிலார்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50
குமரியில் தொடர் மழை ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் வேலை இழப்பு – அரசு நிவ | விசில் மீடியா