உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

குமரி மாவட்டத்தில் மழைக்கு 40 வீடுகள் இடிந்து சேதம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் 40 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் 40 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு, வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Team - Editorial

பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
குமரி மாவட்டத்தில் மழைக்கு 40 வீடுகள் இடிந்து சேதம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதுடன், பல இடங்களில் மண்சரிவும் ஏற்பட்டுள்ளது.குமரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 10 வீடுகள் இடிந்து சேதமடைந்தன. கடந்த ஒரு வாரமாகப் பெய்து வரும் கனமழையால் இதுவரை 40-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. கருங்கல் அருகே தொலையாவட்டம் பகுதியில் பழைய வீடு ஒன்று இடிந்து விழுந்தது. அருமனை அருகே மஞ்சாலுமூடு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு, பெரிய பாறாங்கல் வீட்டின் மீது விழுந்ததில் சமையலறை சேதமடைந்தது.மேலும், தாழ்வான குடியிருப்புகள் மற்றும் தென்னந்தோப்புகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. குழித்துறை ஆறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு படிப்படியாகக் குறைந்து வருகிறது. திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க ஆறாவது நாளாகத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50
குமரி மாவட்டத்தில் மழைக்கு 40 வீடுகள் இடிந்து சேதம் | விசில் மீடியா