தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை ஊராட்சிக்குட்பட்ட கருப்பன் கோயில் தெருவில், மாவு தயாரிக்கும் நிறுவனத்திலிருந்து கழிவுநீர் சாலையில் வெளியேறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சாலை வழியாக குத்துக்கல்வலசை பகுதி பொதுமக்கள் மட்டுமின்றி, பள்ளி மாணவர்கள் உட்பட ஏராளமானோர் தினமும் சென்று வருகின்றனர். இந்நிலையில், சாலையில் கழிவுநீர் ஓடுவதால் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம், கொசு தொல்லை உள்ளிட்ட சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படுவதுடன், நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதையடுத்து, மாவட்ட நிர்வாகமும் ஊராட்சி நிர்வாகமும் உடனடியாக ஆய்வு செய்து, கழிவுநீர் சாலையில் வெளியேறுவதைத் தடுத்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதை தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பையும், மாணவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு,தென்காசி மாவட்ட நிர்வாகமும் குத்துக்கல்வலசை ஊராட்சி நிர்வாகமும் உடனடியாக சம்பவ இடத்தை ஆய்வு செய்து, கழிவுநீர் சாலையில் வெளியேறுவதைத் தடுத்து, நிரந்தர தீர்வு காண வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குத்துக்கல்வலசை சாலையில் பெருக்கெடுக்கும் கழிவுநீர் – பொதுமக்கள் அவதி
குத்துக்கல்வலசையில் சாலையில் கழிவுநீர் தேங்குவதால் பொதுமக்கள், மாணவர்கள் அவதி. நிரந்தர தீர்வு காண அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்காசி குத்துக்கல்வலசையில் மாவு தயாரிப்பு நிறுவனத்திலிருந்து கழிவுநீர் சாலையில் வெளியேறுவதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். துர்நாற்றம், கொசுத்தொல்லை ஏற்படுவதால், அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Team - Editorial
இப்போது வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
