உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

கிருஷ்ணகிரி அருகே கோர விபத்து - 2 கல்லூரி மாணவர்கள் தீயில் கருகி பலி

கிருஷ்ணகிரி அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்துக்குள்ளானது.

கிருஷ்ணகிரி அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், தீப்பிடித்து எரிந்ததில் கல்லூரி மாணவர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Team - Editorial

பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
கிருஷ்ணகிரி அருகே கோர விபத்து - 2 கல்லூரி மாணவர்கள் தீயில் கருகி பலி

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள எஸ்.பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி, திருச்செல்வன் ஆகிய இருவரும் கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகின்றனர். இவர்கள் பெங்களூருவுக்குச் சென்றுவிட்டு ஊருக்குத் திரும்பிய போது, பெங்களூரு–திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் நாகம்பட்டி டோல்கேட் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த சாரதி, வேலு ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்த தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இச்சமபவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதை தொடர்ந்து, விபத்துக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50
கிருஷ்ணகிரி அருகே கோர விபத்து - 2 கல்லூரி மாணவர்கள் தீயில் கருகி பலி | விசில் மீடியா