தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே செவத்தையாபுரம் சோலைபுதூர் வேதமாணிக்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜா. இவர் அப்பகுதியில் உள்ள வெல்டிங் பட்டறையில் வேலை செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது அபர்ணா, முத்துமாலை அம்மன் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், மாணவி வேறொரு நபருடன் செல்போனில் பேசுவதாக சந்தேகமடைந்த முத்துராஜா, அவரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில், மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது அங்கு சென்ற முத்துராஜா, வாக்குவாதத்தில் ஈடுபட்டு கத்தியால் குத்தியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்துள்ளார். பின்னர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், மருத்துவமனையில் பாதுகாப்புடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் விவகாரத்தில் பிளஸ்-1 மாணவி கத்தியால் குத்திக் கொலை – வாலிபர் கைது
தூத்துக்குடி செவத்தையாபுரத்தில் காதல் சந்தேகத்தால் பிளஸ்-1 மாணவியை கத்தியால் குத்திக் கொலை செய்த வாலிபர் முத்துராஜா கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் செவத்தையாபுரத்தில் வேறொருவருடன் மாணவி பேசுவதாக ஏற்பட்ட சந்தேகத்தில், பிளஸ்-1 மாணவி அபர்ணாவை கத்தியால் குத்திக் கொலை செய்த முத்துராஜா, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
Team - Editorial
இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
