கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அஞ்செட்டி அடுத்த பூஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் தனது மாடுகளை விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது மாடுகள் இரை தேடி அருகிலுள்ள வனப்பகுதிக்குள் சென்றுள்ளன. இதையடுத்து மாடுகளைத் தேடி மாரிமுத்து வனப்பகுதிக்குச் சென்றார். அப்போது எதிரே வந்த காட்டு யானை அவரை துரத்திச் சென்று தூக்கி வீசி தாக்கியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். இந்நிலையில், நீண்ட நேரமாக மாரிமுத்துவைக் காணாத உறவினர்கள் அவரைத் தேடிச் சென்ற போது, வனப்பகுதியில் காயங்களுடன் கிடந்ததைப் பார்த்து மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும், வனப்பகுதிக்குள் தேவையின்றி செல்ல வேண்டாம் என்றும், யானைகள் கிராமத்துக்குள் வந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
காட்டு யானை தாக்கி விவசாயி படுகாயம்
ஓசூர் அருகே மாடுகளைத் தேடி வனப்பகுதிக்குச் சென்ற விவசாயியை காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே மாடுகளைத் தேடி வனப்பகுதிக்குச் சென்ற விவசாயி மாரிமுத்துவை காட்டு யானை தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவருக்கு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
