உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

கல்லறை திருநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் மீன்பிடிக்கச் செல்லாத விசைப்படகு மீனவர்கள்

கல்லறை திருநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாததால் 270-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

கல்லறை திருநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் மீன்பிடித் துறைமுகத்தில் 270-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
கல்லறை திருநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் மீன்பிடிக்கச் செல்லாத விசைப்படகு மீனவர்கள்

கல்லறை திருநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் 270-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் நவம்பர் 2-ஆம் தேதி கல்லறை திருநாள் எனப்படும் ஆத்மாக்களின் திருநாள் அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் கிறிஸ்தவர்கள் தங்களது மறைந்த முன்னோர்களின் கல்லறைகளைச் சுத்தம் செய்து, மலர் மாலைகள் அணிவித்து, மலர்கள் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்துவது வழக்கம். தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் மீன்பிடித் தொழிலில் அதிக அளவில் கிறிஸ்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக ஆத்மாக்களின் திருநாளை முன்னிட்டு இன்று விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் விடுமுறை அனுசரித்து வருகின்றனர். இதனால் தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் 270-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

320 × 50