கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் அருகே உள்ள அளந்தங்கரையைச் சேர்ந்த சுபின், எலி காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தார்.
சென்னை பரணிபுத்தூரில் உள்ள மின்பகிர்மான நிலையத்தில் களப்பணியாளராகப் பணியாற்றி வந்த சுபினுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, அவருக்கு எலி காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, சொந்த ஊருக்கு அழைத்து வரப்பட்ட சுபினின் உடல்நிலை மோசமடைந்ததால், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சுபினுக்கு அவரது பெற்றோர் பெண் பார்த்து வந்தனர். மேலும், அவர் புதிய வீடு ஒன்றையும் கட்டி வந்தார். அடுத்த மாதம் அந்த வீட்டின் புதுமனை புகுவிழா நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அவரது உயிரிழப்பு குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி அருகே எலி காய்ச்சலுக்கு மின் ஊழியர் உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் அருகே உள்ள அளந்தங்கரையைச் சேர்ந்த சுபின், எலி காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தார்.
கன்னியாகுமரி அருகே மின்வாரிய ஊழியர் சுபின் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Team - Editorial
பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




