சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பனிக்கனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேசுதாஸ். இவரது மனைவி வளர்மதி. இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளனர். இவர் மானாமதுரை சிப்காட் பகுதியில் கடற்பாசியில் இருந்து உரம் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. அந்த தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் வேலைக்கு வந்த ஜேசுதாஸ், தனக்கு ஒதுக்கப்பட்ட பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வீரியமிக்க ஆசிட்டில் கசிவு ஏற்பட்டு, விஷ வாயு அந்தப் பகுதி முழுவதும் பரவியது. இதனால் அங்கிருந்த தொழிலாளர்கள் வெளியேறினர். ஆனால், அதிக அளவில் விஷ வாயுவை சுவாசித்த ஜேசுதாஸ் சில விநாடிகளிலேயே மயங்கி விழுந்தார். அவரைச் சக தொழிலாளர்கள் சென்று பார்த்தபோது, அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. இந்த தகவலறிந்து வந்த மானாமதுரை சிப்காட் போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து, உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
உரம் தயாரிக்கும் தொழிற்சாலையில் விஷ வாயு தாக்கி தொழிலாளி உயிரிழப்பு
மானாமதுரை உரத் தொழிற்சாலையில் விஷ வாயு தாக்கியதில் தொழிலாளி ஜேசுதாஸ் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சிப்காட் பகுதியில் உள்ள உரம் தயாரிக்கும் தொழிற்சாலையில் விஷ வாயு கசிந்ததில், தொழிலாளி ஜேசுதாஸ் (34) உயிரிழந்தார். ஆசிட் கசிவால் விஷ வாயு பரவியதில் அவர் மயங்கி விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Team - Editorial
பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




