உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

இரயிலில் இரவு நேரத்தில் சார்ஜிங் வசதி நிறுத்தம்

இரயிலில் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை சார்ஜிங் பாயிண்ட்களின் மின் இணைப்பைத் துண்டிக்க இரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இரயிலில் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை சார்ஜிங் பாயிண்ட்களின் மின் இணைப்பைத் துண்டிக்க இரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பவர் பேங்க் வெடித்த சம்பவத்தைத் தொடர்ந்து, தீ விபத்துகளைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Team - Editorial

இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
இரயிலில் இரவு நேரத்தில் சார்ஜிங் வசதி நிறுத்தம்!

இரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை சார்ஜிங் பாயிண்ட்களின் மின் இணைப்பைத் துண்டிக்க இரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து இரயில்வே மண்டலங்களுக்கும் இது தொடர்பாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து, தென்கிழக்கு இரயில்வே மண்டலத்தில் இயக்கப்பட்ட இரயிலில், பயணி ஒருவர் சார்ஜிங் பாயிண்டில் பவர் பேங்கை இணைத்துவிட்டு தூங்கியுள்ளார். அப்போது பவர் பேங்க் வெடித்து புகை வெளியேறியது. அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் மின்சாதனங்கள் அதிக வெப்பமடைவதால் ஏற்படக்கூடிய தீ விபத்துகளைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். இந்த நடைமுறையால் இரவு நேரத்தில் இரயிலில் பயணம் செய்யும் பயணிகள் சார்ஜிங் வசதியைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே, பயணிகள் தங்களது செல்போன்களை முன்கூட்டியே சார்ஜ் செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50
இரயிலில் இரவு நேரத்தில் சார்ஜிங் வசதி நிறுத்தம்! | விசில் மீடியா