சென்னை ஆவின் நிறுவனத்தில் வெண்ணெய், பன்னீர், பால் பவுடர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பால் பொருட்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவலுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான ஆவின் தயாரிக்கும் பால் மற்றும் பால் பொருட்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, சந்தையின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். மேலும், மில்க்ஷேக், பாதாம், பிஸ்தா மிக்ஸ் பவுடர், குக்கீஸ், சாக்லேட் உள்ளிட்ட பல பொருட்களின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், நெய் உற்பத்தி மற்றும் விற்பனையும் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.நிதி நெருக்கடி மற்றும் நிர்வாகக் குளறுபடிகளே இதற்குக் காரணம் எனக் கூறப்படும் நிலையில், ஆவின் நிறுவனத்தின் வளர்ச்சியை உறுதி செய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், அனைத்து பால் பொருட்களையும் முழுமையாக உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆவினில் 100-க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் உற்பத்தி நிறுத்தம் - அன்புமணி கண்டனம்
சென்னை ஆவின் நிறுவனத்தில் வெண்ணெய், பன்னீர், பால் பவுடர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பால் பொருட்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை ஆவின் நிறுவனத்தில் வெண்ணெய், பன்னீர், பால் பவுடர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பால் பொருட்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவலுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Team - Editorial
பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




