மயிலாடுதுறை அருகே உள்ள ஆனதாண்டவபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன். திமுகவின் தொ.மு.ச தொழிற்சங்கத்தில் நிர்வாகியாக இருந்த இவர், அரசு போக்குவரத்து கழகத்தில், நடத்துனராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் பணிக்கு சென்ற தமிழ்செல்வன், இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள், தமிழ்செல்வனை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இதையடுத்து, அவரது செல்போனிலும் தொடர்பு கொள்ள முயன்ற போது அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. இந்நிலையில், ஆனதாண்டவபுரம் ரயில்வே கேட் அருகே தமிழ்செல்வன் வெட்டுக் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், தமிழ்செல்வன் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் முன்விரோதம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசுப் பேருந்து நடத்துனர் வெட்டிக் கொலை – மர்ம நபர்களுக்கு போலீசார் வலை
மயிலாடுதுறை அருகே தமிழ்செல்வன் என்ற அரசு பேருந்து நடத்துனர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
மயிலாடுதுறை அருகே ஆனதாண்டவபுரத்தைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் தமிழ்செல்வன், ரயில்வே கேட் அருகே மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலைக்கான காரணம் குறித்து முன்விரோதம் உள்ளிட்ட கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




