உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

அதிகாலை நடைபயிற்சியின்போது கோரவிபத்து - கார் மோதி ஒருவர் பலி

நக்கரேக்கல் அருகே அதிகாலை நடைபயிற்சி சென்றவர்கள் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் நக்கரேக்கல் அருகே அதிகாலை நடைபயிற்சி சென்றவர்கள் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.

Team - Editorial

பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
அதிகாலை நடைபயிற்சியின்போது கோரவிபத்து - கார் மோதி ஒருவர் பலி

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் நக்கரேக்கல் அருகே தாடிகல்லு பகுதியில் வாரங்கல் நோக்கிச் சென்ற கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மிர்யாலகுடா மண்டலம் யாத்காரிபள்ளியைச் சேர்ந்த பண்டு வெங்கன்னா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் நடைபயிற்சி சென்ற மற்றொருவர் பலத்த காயமடைந்தார். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவசரகால மருத்துவக் குழுவினர், காயமடைந்தவரை ஆம்புலன்ஸ் மூலம் ஐதராபாத் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். .

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50
அதிகாலை நடைபயிற்சியின்போது கோரவிபத்து - கார் மோதி ஒருவர் பலி | விசில் மீடியா