திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கோடாங்கிபட்டியில், 80 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வந்த இந்தப் பள்ளியில், தற்போது 100-க்கும் குறைவான மாணவர்களே படித்து வருகின்றனர். இந்நிலையில். போதிய பராமரிப்பு இல்லாததால் பள்ளிக் கட்டிடங்கள் சேதமடைந்து, மேற்கூரை இடிந்து விழும் அபாய நிலையில் இருப்பதாகவும், இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிகின்றன. மேலும், மாணவர்களுக்குப் போதிய கழிப்பறை வசதிகளும் இல்லை என பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர். இதையடுத்து, அதே பகுதியைச் சேர்ந்த ரேணுகாதேவி மற்றும் அவரது மகன் உமாசங்கர் ஆகியோர், தங்களது குடும்ப உறுப்பினர்களைப் பள்ளிக் குழுவில் சேர்த்து, பள்ளியை அறக்கட்டளையாக மாற்றி தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சிப்பதாகப் புகார் எழுந்துள்ளது.இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஊர் பொதுமக்களும், பெற்றோர்களும் தங்களது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும், பள்ளிக் குழுவில் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களை உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும் என்றும், அரசு உதவி பெறும் பள்ளியை முழுமையான அரசுப் பள்ளியாக மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
80 ஆண்டுகள் பழமையான பள்ளியை அறக்கட்டளையாக மாற்ற முயற்சி – பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம்
கோடாங்கிபட்டி பள்ளியை அறக்கட்டளையாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து, பெற்றோர்களும் பொதுமக்களும் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் கோடாங்கிபட்டியில் 80 ஆண்டுகள் பழமையான அரசு உதவி பெறும் பள்ளியை அறக்கட்டளையாக மாற்ற முயற்சிப்பதாக புகார் எழுந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்களும் பொதுமக்களும் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




