தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம் இந்த ஆண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான 7 மாதங்களில் 83.53 லட்சம் டன் உள்நாட்டுச் சரக்குகளைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 63.15 லட்சம் டன் சரக்குகள் கையாளப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 32.27 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உள்நாட்டு நிலக்கரி கையாளுதல் 50.58 சதவீதம் அதிகரித்து 67.04 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. அதே போல், உலோகக் கசடு கையாளுதல் 67.74 சதவீதம் அதிகரித்து 2.11 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. மேலும், உள்நாட்டுக் கப்பல்களின் வருகை கடந்த ஆண்டு 123-ஆக இருந்த நிலையில், தற்போது 170-ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் கப்பல்களின் வருகையில் 38.21 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும், துறைமுகத்தின் ஒட்டு மொத்த சரக்குக் கையாளுதல் 260.5 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. இதில் உள்நாட்டுச் சரக்குகளின் பங்கு 32.06 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடல்வழிப் போக்குவரத்து மூலம் குறைந்த செலவில் சரக்குகளைக் கையாள்வதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த்குமார் புரோகித் தெரிவித்துள்ளார்.
7 மாதங்களில் 83.53 லட்சம் டன் உள்நாட்டு சரக்குகளைக் கையாண்டு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனை
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 7 மாதங்களில் 83.53 லட்சம் டன் உள்நாட்டுச் சரக்குகளைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 7 மாதங்களில் 83.53 லட்சம் டன் உள்நாட்டுச் சரக்குகளைக் கையாண்டு, கடந்த ஆண்டை விட 32.27 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து புதிய சாதனை படைத்துள்ளது.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




