உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

15 வயது சிறுமிக்கு தொல்லை கொடுத்த வேன் ஓட்டுநர் போக்சோவில் கைது

வடமதுரையில் 15 வயது சிறுமிக்குத் தொல்லை கொடுத்த வேன் ஓட்டுநர் ராஜ்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் 15 வயது சிறுமிக்குத் தொல்லை கொடுத்த வேடசந்தூரைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் ராஜ்குமாரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
15 வயது சிறுமிக்கு தொல்லை கொடுத்த வேன் ஓட்டுநர் போக்சோவில் கைது

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே திருமாணிக்கனூரைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் வேன் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவர் வடமதுரை பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியிடம் தன்னுடன் பேசிப் பழகுமாறு கூறி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் அச்சமடைந்த சிறுமி, நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.அந்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முத்தமிழ் செல்வி, சார்பு ஆய்வாளர் கௌசல்யா மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் ராஜ்குமார் சிறுமிக்குத் தொல்லை கொடுத்தது உறுதியானதைத் தொடர்ந்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராஜ்குமார் சிறையில் அடைக்கப்பட்டார்.

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

320 × 50