சேலம் மாவட்டம் சிவதாபுரம் விஜயலட்சுமி நகரைச் சேர்ந்தவர் சாகதேவன். இவர் தனது மகன் ராமசாமியை கொலை வழக்கில் போலீசார் கைது செய்ததால் மனவேதனையில் இருந்த சகாதேவன், அவரை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து, தனது கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் மட்டுமே டவரில் இருந்து கீழே இறங்குவேன் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரை பத்திரமாக மீட்க முயற்சி மேற்கொண்டனர். மேலும், போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறங்குமாறு அறிவுறுத்தினர்.விசாரணையில், சகாதேவன் ஏற்கெனவே இரண்டு முறை இதே போன்று செல்போன் டவரில் ஏறி மிரட்டல் விடுத்ததாகத் தெரிய வந்துள்ளது. இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதையடுத்து தனது மகன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் அவர் இவ்வாறு நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
100 அடி உயர செல்போன் டவரில் ஏறி முதியவர் தற்கொலை முயற்சி
சேலம் மாவட்டம் சிவதாபுரம் விஜயலட்சுமி நகரில் சகாதேவன் என்ற முதியவர், 100 அடி உயரமுள்ள செல்போன் டவரில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
சேலத்தில் மகன் கைது செய்யப்பட்டதால் மனவேதனை அடைந்த 65 வயது சகாதேவன், அவரை விடுவிக்கக் கோரி 100 அடி உயர செல்போன் டவரில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். ஏற்கெனவே இரண்டு முறை இதேபோல் டவரில் ஏறியதாக போலீசார் தெரிவித்தனர்.
Team - Editorial
பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




