திண்டுக்கல் மாவட்டம் கருக்காம்பட்டி பரணி மில் அருகே நாகம்பட்டியைச் சேர்ந்த முத்துராஜா என்பவர் ஆட்டோவை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த கார், ஆட்டோ மீது மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த ஸ்கார்பியோ கார் சாலையின் மையத் தடுப்பைத் தாண்டி எதிர்ப்புறச் சாலையில் பாய்ந்து, நாமக்கல்லில் இருந்து தென்காசி நோக்கிச் சென்ற பிக்கப் வாகனத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஸ்கார்பியோ கார் ஓட்டுநர் நாராயண், ஆட்டோ ஓட்டுநர் முத்துராஜா, பிக்கப் வாகன ஓட்டுநர் கருப்பசாமி மற்றும் கணபதி, பாலமுருகன் ஆகிய ஐந்து பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில், ஸ்கார்பியோ காரில் இருந்த பையில் ரூ.5.40 லட்சம் பணமும் பீர் பாட்டில்களும் இருந்துள்ளது. அவற்றைக் கைப்பற்றிய போலீசார், பணம் மற்றும் பீர் பாட்டில்களின் பின்னணி, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேடசந்தூர் அருகே மூன்று வாகனங்கள் அடுத்தடுத்து மோதல் – 5 பேர் படுகாயம்
வேடசந்தூர் அருகே கார், ஆட்டோ மற்றும் பிக்கப் வாகனம் மோதிய விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
வேடசந்தூர் அருகே கார், ஆட்டோ மற்றும் பிக்கப் வாகனம் மோதிய விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர். ஸ்கார்பியோவில் ரூ.5.40 லட்சம் பணம், பீர் பாட்டில்கள் இருந்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
