திருச்சியில் பிரதமர் மோடியிடம் கோரிக்கை மனு அளிக்கச் செல்ல முயன்ற அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், மேகதாது அணை கட்டுமானத்தைத் தடுக்கவும், தமிழகத்திற்குக் காவிரி நீரைப் பெற்றுத் தரவும் வலியுறுத்தி, பிரதமரிடம் மனு அளிக்க விவசாயிகள் திட்டமிட்டிருந்தனர். இதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததுடன், அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகளைத் திருச்சியில் வீட்டுக்காவலில் வைத்தனர். இதற்குக் கண்டனம் தெரிவித்த அய்யாக்கண்ணு, விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை அரசிடம் எடுத்துரைப்பதற்கு உரிமை இருப்பதாகக் கூறினார். மேலும், மேட்டூர் அணைக்குத் தண்ணீர் வரத்து நிறுத்தப்பட்டால், காவிரி டெல்டா பகுதிகளில் சம்பா சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். விவசாயப் பணிகள் மட்டுமின்றி, பொதுமக்களுக்கான குடிநீர் விநியோகமும் பாதிக்கப்படும் எனக் கவலை தெரிவித்தார். தமிழகத்தின் நீராதாரத்தைப் பாதுகாக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கவும் காவிரி நீரைப் பெற்றுத் தர வேண்டும் என்பதே விவசாயிகளின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.இதை தொடர்ந்து, மேகதாது அணை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள விவசாயிகள்
திருச்சியில் பிரதமர் மோடியிடம் கோரிக்கை மனு அளிக்கச் செல்ல முயன்ற அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடியிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளிக்கச் செல்ல முயன்ற அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள், திருச்சியில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




