கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பெரியவடவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல். இவர் விவசாயமும், கொத்தனார் வேலையும் செய்து வருகிறார். இவருக்கு லீலா என்ற மனைவியும், இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளும் உள்ளனர்.அதே கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவரும் விவசாயம் செய்து வருகிறார். இருவருக்கும் சொந்தமாக விவசாய நிலங்கள் உள்ளன. அவர்களது நிலங்கள் அருகருகே அமைந்திருந்ததால், நிலம் தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், இன்று காலை கதிர்வேல் வழக்கம் போல் தனது வயலுக்குச் சென்றார். அப்போது அங்கு இருந்த பொன்னுசாமிக்கும் கதிர்வேலுக்கும் இடையே மீண்டும் நிலப்பிரச்சினை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த பொன்னுசாமி, தான் வைத்திருந்த கத்தியால் கதிர்வேலின் தலையில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த கதிர்வேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, ரத்தக்கறை படிந்த கத்தியுடன் சென்ற பொன்னுசாமி, போலீசாரிடம் சரணடைந்தார். அவரைக் கைது செய்த மங்கலம்பேட்டை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும்,இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருத்தாசலம் அருகே நிலத்தகராறில் ஒருவர் வெட்டிக்கொலை – விவசாயி கைது
கடலூர் மாவட்டம் பெரியவடவாடியில் நிலத்தகராறு காரணமாக கதிர்வேல் (49) வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பொன்னுசாமியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
விருத்தாசலம் அருகே உள்ள பெரியவடவாடி கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல் என்பவர் நிலத்தகராறு காரணமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அருகிலுள்ள விவசாய நிலம் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், பொன்னுசாமி என்பவர் கதிர்வேலை கத்தியால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் கதிர்வேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, பொன்னுசாமி போலீசாரிடம் சரணடைந்தார். அவரைக் கைது செய்த போலீசார், சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Team - Editorial

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




