கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் வகையில் வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில், பெருமளவு எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக பெண் யூடியூபர் மினு ஜாஸ்மின் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து, போதைப்பொருள் பறிமுதல் செய்தனர். அந்த போதைப்பொருளின் மதிப்பு ரூ.1.50 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்தக் கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா, போதைப்பொருள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது, யாருக்கு விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டது என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இச் சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் போதைப்பொருள் கடத்திய 4 பேர் கைது - ரூ. 1.50 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
கேரளாவின் மலப்புரத்தில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தியதாக பெண் யூடியூபர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் மலப்புரத்தில் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது. இதில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், பெண் யூடியூபர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




