கடலூர் மாவட்டம் சிதம்பரம் மேலரத வீதியில் தனியார் துணிக்கடை ஒன்று செயல் பட்டு வருகின்றது. அந்த துணிக்கடையில் ரூ. 1000 மதிப்புள்ள பட்டுப்புடவையை ரூ.199க்கு வழங்கப்படும் என விளம்பரம் துணிக்கடை நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த விளம்பரத்தை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் கடையில் நேற்று ஒரே நாளில் ஒருமணி நேரத்தில் குவிந்தனர். இதையடுத்து, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் ரூ.199 மதிப்புள்ள பட்டுப் புடவை கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தனர். மேலும், குறைந்த விலையில் ரூ.199 பட்டுப்புடவை விற்பனை செய்யப்படாததால் ஏமாற்றம் அடைந்த வாடிக்கையாளர்கள் கடை ஊழியர்கள் மீது புகார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து, வாடிக்கையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஜவுளிக்கடை முழுவதும் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டு காணப்பட்டது.
வாடிக்கையாளர்களுக்கு அல்வா குடுத்த ஜவுளிக்கடை
ரூ. 199க்கு பட்டுப்புடவை வாங்க குவிந்த வாடிக்கையாளர்கள், கிடைக்காததால் சிதம்பரத்தில் கடை ஊழியர்களுடன் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்
சிதம்பரத்தில் ரூ.1,000 பட்டுப்புடவையை 199-க்கு புடவை கிடைக்காததால் வாடிக்கையாளர்கள் ஜவுளிக்கடை ஊழியர்களுடன் வாக்குவாத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

