கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர் நலச் சங்கத்தின் முதலாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனர். சங்கத்தின் மண்டலத் தலைவர் ஜெயம் சுரேஷ் ராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத் தலைவர் பொன் குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பொன் குமார், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் ரியல் எஸ்டேட் துறையைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் தனி அமைச்சகம் மற்றும் தனித்துறையை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், தமிழகத்தில் அதிகமாக உள்ள பத்திரப் பதிவுக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும், நிலம் விற்பனை செய்வதற்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும், வீட்டுமனைப் பிரிவுகளுக்கு ஒற்றைச் சாளர முறையில் விரைவாக அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.ரியல் எஸ்டேட் தொழிலாளர்களுக்கு காப்பீடு, கல்வி, மருத்துவ உதவிகள் வழங்க தனி நிதியம் அமைக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு அரசு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், Star 3.0 திட்டத்தின் சாதக, பாதகங்கள் ஆய்வு செய்யப்பட்டு அரசுக்குப் பரிந்துரைகள் வழங்கப்படும் என்றும் கூறினார்.
ரியல் எஸ்டேட் துறைக்கு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு REEWA சங்கம் கோரிக்கை
ஓசூரில் REEWA சங்க விழாவில் பேசிய பொன் குமார், ரியல் எஸ்டேட் துறைக்கு தனி அமைச்சகம் அமைக்க அரசுகளிடம் கோரிக்கை விடுத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் REEWA சங்க விழாவில் பங்கேற்ற பொன் குமார், ரியல் எஸ்டேட் துறைக்கு தனி அமைச்சகம், தொழிலாளர்களுக்கு நலவாரியம், பத்திரப் பதிவுக் கட்டணக் குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்தினார்.
Team - Editorial
இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.



