தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அருகே கோழித்தீவனம் ஏற்றிச் சென்ற லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில், தொழிலாளர்கள் இருவர் லேசான காயமடைந்தனர்.
திருப்பூரில் இருந்து தொட்டம்பட்டிக்கு கோழித்தீவனம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை ஆனந்த் என்பவர் ஓட்டி வந்தார். இந்நிலையில், மொரப்பூர் – மருதிப்பட்டி சாலையில் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது, சாலையின் வளைவில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியில் இருந்த தொழிலாளர்கள் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த விபத்து காரணமாக சிறிது நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கக்கப்ட்டது. மேலும், இது குறித்து தகவல் அறிந்த மொரப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மொரப்பூர் அருகே கோழித்தீவனம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
திருப்பூரில் இருந்து தொட்டம்பட்டிக்கு கோழித்தீவனம் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அருகே கோழித்தீவனம் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்த விபத்தில் தொழிலாளர்கள் இருவர் லேசான காயமடைந்தனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




