கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் நால்ரோடு பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் பங்கை நீலகிரி மாவட்டம் கோத்தகிரியைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் சேகர் என்பவர் 2 ஆண்டுகளாக குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். இந்த பெட்ரோல் பங்கில் மேட்டுப்பாளையம் டேன் இந்தியா காலனி பகுதியைச் சேர்ந்த வினோத் பாலாஜி என்பவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று இரவு வழக்கம் போல் பணியில் இருந்த அவர், அங்கிருந்த தொழிலாளர்களிடம் உணவு வாங்கிச் சாப்பிட்டுவிட்டு தூங்கியுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை எழுந்து பார்த்த போது, கட்டிலில் வினோத் பாலாஜி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் அருகே பெட்ரோல் பங்கில் தொழிலாளி கழுத்து அறுத்துக் கொலை
மேட்டுப்பாளையம் அருகே பெட்ரோல் பங்கில் தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளி வினோத் பாலாஜி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் பணியாற்றிய தொழிலாளி வினோத் பாலாஜி, கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த போது கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
