தமிழ்நாட்டில் காற்றாலை மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தைச் சேமித்து வைப்பதற்கான பேட்டரி கட்டமைப்புகளை உருவாக்க மின்சார வாரியம் முதலீடு செய்யவில்லை என்று வீ த லீடர்ஸ் அமைப்பின் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் மின்சாரத்தைச் சேமித்து வைப்பதற்கான பேட்டரி வசதிகள் உள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் அதற்கான அடிப்படை கட்டமைப்புகள் உருவாக்கப்படவில்லை என்று விமர்ச்சித்துள்ளார். இதனால், உச்சபட்ச மின் தேவை நேரங்களில் ஏற்படும் பற்றாக்குறையைச் சமாளிக்க, யூனிட்டுக்கு ரூ.28 முதல் ரூ.35 வரை கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டிய நிலை உள்ளது என்று கூறியுள்ளார். இதன் காரணமாக மின்கட்டணம் உயர்வதுடன், தொழில்துறையும் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்தார். மேலும், அடுத்த ஆண்டில் எவ்வளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும், எவ்வளவு முதலீடு செய்யப்படும், மின்சாரக் கொள்முதலை எவ்வாறு குறைப்பது என்பதற்கான நீண்டகாலத் திட்டம் அரசிடம் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். மின்சாரப் பிரச்சினையைத் தீர்க்க அரசு பொறுப்பான பதிலளிப்பதுடன், அடுத்த ஓராண்டுக்கான தெளிவான கொள்கைத் திட்டத்தையும் வெளியிட வேண்டும் என்று அண்ணாமலை கேட்டுக்கொண்டார்.
மின்சார சேமிப்புக் கட்டமைப்பு இல்லை - அண்ணாமலை குற்றச்சாட்டு
தமிழகத்தில் மின்சார சேமிப்புக் கட்டமைப்பு இல்லாததால் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் காற்றாலை மின்சாரத்தைச் சேமிப்பதற்கான பேட்டரி கட்டமைப்புகளை உருவாக்க மின்சார வாரியம் முதலீடு செய்யவில்லை என அண்ணாமலை குற்றம்சாட்டினார். இதனால், அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கும் நிலை ஏற்படுவதாகக் கூறிய அவர், மின்சாரக் கொள்முதல் செலவைக் குறைக்க அரசு நீண்டகாலத் திட்டத்தை வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
