உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

மதுபானக் கடைகளை திறக்காமல் போராட்டம் – 75 சூப்பர்வைசர்கள் அதிரடியாக சஸ்பெண்ட்

கிருஷ்ணகிரியில் மதுபானக் கடைகளை திறக்காமல் போராட்டத்தில் ஈடுபட்ட 75 சூப்பர்வைசர்களை நிர்வாகம் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மதுபான ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் கடைகள் திறக்கப்படவில்லை. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 75 சூப்பர்வைசர்களை பணியிடை நீக்கம் செய்து நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:
மதுபானக் கடைகளை திறக்காமல் போராட்டம் – 75 சூப்பர்வைசர்கள் அதிரடியாக சஸ்பெண்ட்

 தமிழகத்தில் மதுபானக் கடைகளில் காலி மதுப்பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து காலி பாட்டில்களை ஒப்படைப்பவர்களுக்கு ரூ.10 வழங்கப்படுகிறது. மேலும், ரூ.1000 மேல் மதுபானம் வாங்குவோருக்கு கியூஆர் குறியீடு மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக போதிய ஸ்கேனிங் இயந்திரங்கள் வழங்கப்படாததால் பணிச்சுமை அதிகரிப்பதாக ஊழியர்கள் குற்றம் சாட்டினர். பின்னர், காலி பாட்டில்களை திரும்பப் பெறும் பணிக்கு தனியார் நிறுவன ஊழியர்களை நியமிக்க வேண்டும், கூடுதல் ஸ்கேனிங் இயந்திரங்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த இரண்டு நாட்களாக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 110 மதுபானக் கடைகளில் பணியாற்றும் 75 சூப்பர்வைசர்களை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.மேலும், தொடர்ந்து கடைகளை திறக்காமல் இருந்தால் விற்பனையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50