தென்காசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புதிய வாகனங்களுக்கான பதிவு எண் ஒதுக்கீடு தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்போது, TN76BU0001 என்ற விஐபி பதிவெண்ணைப் பெறுவதற்காக அரசு உதவிச் செயலாளர் பெயரில் ஒதுக்கீட்டு ஆணை சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் அந்த ஆவணம் போலியானது என்பது அதிகாரிகளின் விசாரணையில் தெரிய வந்தது. இது குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சரவணபவன், தென்காசி மாவட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், முத்துப்பாண்டி கார் ஷோரூம் ஒன்றில் டீலராகப் பணியாற்றி வருவதும், புதிதாக கார் வாங்கிய உரிமையாளருக்கு விஐபி பதிவெண் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.20 ஆயிரம் பெற்றதும் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர். அந்தப் பணத்திற்காக போலி அரசு ஆணையைத் தயாரித்து சமர்ப்பித்ததாகவும், மோசடி செய்தல், போலி ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், வழக்குப்பதிவு செய்த போலீசார் முத்துப்பாண்டியைக் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலி அரசு ஆணையைத் தயாரித்து காருக்கு விஐபி பதிவெண் பெற முயன்ற வாலிபர் கைது
தென்காசியில் போலி அரசு ஆணையைத் தயாரித்து, காருக்கு விஐபி பதிவெண் பெற முயன்ற முத்துப்பாண்டி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசியில் போலி அரசு ஆணையைத் தயாரித்து, காருக்கு விஐபி பதிவெண் பெற முயன்ற நெல்லை பொன்னாகுடியைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




