கடலூர் மாவட்டம் பெண்ணாடம் காமராஜர் தெருவைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் மகன் மனோஜ்குமார் ஐ.டி.ஐ., படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில், 9-ம் தேதி வெளியூரில் வேலைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். இந்நிலையில், நேற்று பகல் பெண்ணாடம் ரயில் நிலையம் அருகே மனோஜ்குமார் மயங்கிக் கிடப்பதாக அவரது நண்பர் பிரசாந்த், தாயார் நிஷாந்திக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, நண்பர்கள் உதவியுடன் மனோஜ்குமாரை வீட்டுக்கு அழைத்து வந்தனர். பின்னர், அவரைப் பெண்ணாடத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தார். இந்த தகவலறிந்த பெண்ணாடம் போலீசார், மனோஜ்குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது தாயார் நிஷாந்தி அளித்த புகாரின் பேரில், போலீசார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இளைஞரின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண்ணாடம் அருகே 18 வயது இளைஞர் மர்ம மரணம்
பெண்ணாடம் இரயில் நிலையம் அருகே 18 வயது இளைஞர் மயங்கி உயிரிழந்துள்ளார்.
பெண்ணாடம் ரயில் நிலையம் அருகே மயங்கிக் கிடந்த மனோஜ்குமார், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
