முதலமைச்சர் ஜோசப் விஜய் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக புதுக்கோட்டைக்கு வருகை தந்தார். திருச்சி விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக புதுக்கோட்டைக்கு வந்த முதலமைச்சருக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்ற முதலமைச்சர் விஜய்க்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த பாரம்பரிய பயிர் வகைகள், நெல், முந்திரி மற்றும் பல்வேறு தானிய வகைகளைப் பார்வையிட்டு அவற்றின் சிறப்புகள் குறித்து கேட்டறிந்தார். இதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் நிறைவடைந்த வளர்ச்சிப் பணிகளைத் திறந்து வைத்தார். மேலும், ரூ.11.72 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். இதன் முக்கிய நிகழ்வாக ரூ.23 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.
புதுக்கோட்டையில் ரூ.23 கோடியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் - முதலமைச்சர் விஜய்
புதுக்கோட்டையில் ரூ.23 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.
புதுக்கோட்டையில் ரூ.23 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார். மேலும், ரூ.11.72 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த வளர்ச்சிப் பணிகளையும் தொடங்கி வைத்தார்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
