தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருந்தாளுனராக பணியாற்றி வருகிறார். இவர், செங்கோட்டை மீனாட்சிபுரத்தில் உள்ள தனது அத்தை வீட்டிற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்றபோது, புளியங்குடியைச் சேர்ந்த பிரவீன்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறிய நிலையில், பிரவீன்குமார் திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம்பெண்ணுடன் நெருங்கிப் பழகியுள்ளார். இந்நிலையில், ஆகஸ்ட் 4-ம் தேதி தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவ செலவுக்கு பணம் தேவைப்படுவதாக பிரவீன்குமார் கூறியுள்ளார். இதனை நம்பிய இளம்பெண், அவரை தனது வீட்டிற்கு வரவழைத்து தங்கக் கம்மலை கொடுத்ததுடன், ரூ.70 ஆயிரம் பணமும் அனுப்பியுள்ளார். இதை தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் 15 நாட்களாக அவருடன் இளம்பெண் பேசுவதை நிறுத்தியுள்ளார். மேலும், கொடுத்த தங்கக் கம்மலை திருப்பிக் கேட்டபோது, பிரவீன்குமார் அதை வழங்க மறுத்ததாகவும், தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொந்தரவு செய்துள்ளார். இதையடுத்து, கிருஷ்ணாபுரம் பேருந்து நிலையத்தில் தாயாருடன் நின்று கொண்டிருந்த இளம்பெண்ணை பிரவீன்குமார் மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படியில் போலீசார் பிரவீன்குமார் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
தென்காசியில் திருமணம் செய்வதாக இளம்பெண்ணிடம் கூறி பணம், நகை பெற்ற இளைஞர் கைது
திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணிடம் பணம், நகை பெற்றதுடன் மிரட்டியதாக புகார் இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
இளம்பெண்ணிடம் பணம், நகை பெற்றதுடன் தொடர்ந்து தொந்தரவு செய்து மிரட்டியதாக புகார் எழுந்ததால், பிரவீன்குமாரை கடையநல்லூர் போலீசார் கைது செய்தனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
