உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

தூத்துக்குடியில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தூத்துக்குடியில் இரண்டு கொலை வழக்குகளில் 7 பேருக்கு தண்டனை. ஒருவருக்கு இரட்டை ஆயுள், 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு.

தூத்துக்குடியில் இரண்டு கொலை வழக்குகளில் 7 பேருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்தது. தேவிகுமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மற்ற 6 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
தூத்துக்குடியில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற இரண்டு கொலை வழக்குகளில் தொடர்புடைய 7 பேருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது,. 2020 ஆம் ஆண்டு கோவில்பட்டி இலுப்பையூரணியைச் சேர்ந்த தேவிகுமார் என்பவர், கடன் தொல்லை காரணமாக தனது இரண்டு குழந்தைகளைக் கிணற்றில் வீசிக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்றார். இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து 2021ஆம் ஆண்டு காடல்குடி அருகே முன்விரோதம் காரணமாக காளிதாஸ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த இரண்டு வழக்குகளும் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன. இந்நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி தாண்டவம், தேவிகுமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். மேலும், மற்ற 6 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். 

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50