தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் அருகே சோட்டையன் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஓட்டப்பிடாரம் முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆவார். இவர் மளிகைக் கடை மற்றும் காய்கறி கடை நடத்தி வந்தார்.இந்நிலையில், அவரது உறவினர் மகளின் பூப்புனித நீராட்டு விழாவை முன்னிட்டு வீட்டு அருகே டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டபோது சிலருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இன்று காலை சோட்டையன் தோப்பு சேது பாதை சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே நின்றுகொண்டிருந்த பாலமுருகனை மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். கொலையாளிகளைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
தூத்துக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டிக்கொலை
தூத்துக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் பாலமுருகன் வெட்டிக்கொலை. கொலையாளிகளைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் பாலமுருகன் மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Team - Editorial
இப்போது வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
