திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் கிறிஸ்டோபர். இவரது மனைவி பவிலா. இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் திருப்பூர் திருக்குமரன் நகரில் வசித்து வருகிறார்கள். இருவரும் கட்டடத் தொழிலாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் கிறிஸ்டோபர் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதையடுத்து, ஒருநாள் தகராறு முற்றிய நிலையில், இரவு ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு இருவரும் தூங்கச் சென்றனர். அப்பொழுது, நள்ளிரவில் எழுந்த கிறிஸ்டோபர், தூங்கிக் கொண்டிருந்த மனைவின் தலையில் அம்மிக்கல்லைப் போட்டுத் தாக்கியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து கிறிஸ்டோபரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் தலையில் அம்மிக்கல்லைப் போட்டு கொலை - கணவர் கைது
மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, தூங்கிக் கொண்டிருந்த அவரது தலையில் அம்மிக்கல்லைப் போட்டுக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் பலவஞ்சிபாளையம் பகுதியில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, தூங்கிக் கொண்டிருந்த அவரது தலையில் அம்மிக்கல்லைப் போட்டுக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்




