ஆந்திரப் பிரதேசம் மாநிலம் திருப்பதி அருகே உள்ள சத்யவேடு மண்டலத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த தீயணைப்பு மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி ஈடுபட்டனர். இந்த விபத்தில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்கள் 5 பேர் சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து, பாய்லர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதற்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை தொழிற்சாலைக்குள் வேறு யாரும் சிக்கி இருக்கிறார்களா என்று தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது. மேலும், இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பதியில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து - 5 பேர் பலி
திருப்பதி அருகே ஸ்ரீ சிட்டி தொழிற்சாலையில் பாய்லர் வெடித்த விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு, 10 பேர் படுகாயமடைந்தனர்.
திருப்பதி அருகே ஸ்ரீ சிட்டியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்த விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Team - Editorial
இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




