திருப்பூர் மாவட்டம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீஹரி. இவர் கொடுவாய் அருகே உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் திருப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் 17 வயது மாணவருக்கும் நட்பு இருந்துள்ளது. இந்நிலையில், குறைந்த விலையில் ஐபோன் வாங்கித் தருவதாகக் கூறிய ஸ்ரீஹரியிடம், பள்ளி மாணவர் ரூ.8 ஆயிரம் கொடுத்துள்ளார். பின்னர் செல்போன் திருட்டு போனது எனத் தெரிய வந்ததால், பணத்தையும் செல்போனையும் திருப்பிக் கேட்டு வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில், ஸ்ரீஹரியை வீட்டிலிருந்து வெளியே அழைத்துச் சென்ற பள்ளி மாணவர், கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஸ்ரீஹரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, ஸ்ரீஹரி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இது குறித்து கொலை வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், 17 வயது பள்ளி மாணவர் திருப்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
திருட்டு ஐபோன் விவகாரத்தில் கல்லூரி மாணவர் கொலை
திருப்பூரில் ரூ.8 ஆயிரத்திற்கு திருட்டு ஐபோன் விவகாரத்தில் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூரில் ரூ.8 ஆயிரத்திற்கு திருட்டு ஐபோன் வாங்கிக் கொடுத்து ஏமாற்றியதாக ஏற்பட்ட தகராறில், கல்லூரி மாணவர் ஸ்ரீஹரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:





