திண்டுக்கல் மாவட்டம் விருதலைப்பட்டி பகுதியில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக கூம்பூர் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் கூம்பூர் காவல் நிலைய ஆய்வாளர் கணேசமூர்த்தி, சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் அப்பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, விருதலைப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள டீக்கடையில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, அங்கு சோதனை மேற்கொண்ட போலீசார், மதுபானம் விற்பனை செய்ததாக குப்புசாமியின் மனைவி ரேவதி என்பவரைக் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 32 மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், ரேவதியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டீக்கடையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த பெண் கைது - 32 மதுபாட்டில்கள் பறிமுதல்
விருதலைப்பட்டி பகுதியில் டீக்கடையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த பெண் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து, போலீசார் 32 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள விருதலைப்பட்டி பகுதியில் டீக்கடையில் வைத்து சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த பெண்ணை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 32 மதுபான பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
