உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

சேலத்தில் 550 கிலோ வெள்ளி கொள்ளை - 5 பேர் கைது

சேலத்தில் 550 கிலோ வெள்ளி கொள்ளை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 323 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது

சேலத்தில் 550 கிலோ வெள்ளிப் பொருட்களைக் கொள்ளையடித்த வழக்கில், சிசிடிவி காட்சிகள் மற்றும் கார் தடயங்களை வைத்து போலீசார் கோவையைச் சேர்ந்த அபிஷேக் உள்ளிட்ட 5 பேரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 323 கிலோ வெள்ளிப் பொருட்கள், 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 3 பேரைப் போலீசார் தேடி வருகின்றனர்.

Team - Editorial

பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
சேலத்தில் 550 கிலோ வெள்ளி கொள்ளை - 5 பேர் கைது

சேலம் மாவட்டம் பள்ளப்பட்டி சின்னேரி வயக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவர் வெள்ளி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு சொந்தமான வெள்ளி பட்டறையில், 12-ஆம் தேதி அதிகாலை 550 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. முகமூடி அணிந்து வந்த கொள்ளையர்கள், காவலாளியை இரும்புக் கம்பியால் தாக்கிக் கட்டிப்போட்டுவிட்டு, பட்டறையின் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சேலம் மாநகரக் காவல்துறை தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தியது. இதில் கொள்ளையர்கள் சிசிடிவி கேமராக்களை உடைத்து, பதிவுகளைச் சேமிக்கும் ஹார்டு டிஸ்க்கையும் எடுத்துச் சென்றனர். இதனால், போலீசார் தொழில்நுட்ப உதவியுடன் பல்வேறு சாலைகளில் உள்ள 1,000க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதையடுத்து, கொள்ளைக்குப் பயன்படுத்திய கார் ஓரிடத்தில் சுமார் இரண்டரை மணி நேரம் நின்றிருந்தது முக்கியத் தடயமாக அமைந்தது. இதன் அடிப்படையில் தஞ்சாவூரில் கோவையைச் சேர்ந்த அபிஷேக் உள்ளிட்ட ஐந்து பேரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 323 கிலோ வெள்ளிப் பொருட்களும் இரண்டு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.  

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50