சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த பெண், நேற்று மாலை தனது குழந்தை மற்றும் தாயுடன் ராஜாஜி சாலையில் உள்ள தலைமைச் செயலகத்திற்கு வந்தார். அப்போது, திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாகச் செயல்பட்டு அவரைத் தடுத்து நிறுத்தி மீட்டனர். இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில் வாலிபர் ஒருவர் காதலிப்பதாகக் கூறி அப்பெண்ணுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுக் கொள்ளச் செய்துவிட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாகத் தெரிய வந்தது. இது குறித்து ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் மனமுடைந்து அவர் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசார் அப்பெண்ணை மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை முடிந்த பின்னர், தன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் எனக் கூறி அப்பெண், வீடு திரும்பினார்.
சென்னை தலைமை செயலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்
சென்னையில் காதலித்து ஏமாற்றியவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் கோபமடைந்த பெண், தனது குழந்தையுடன் தலைமைச் செயலகம் முன் தீக்குளிக்க முயன்றார்.
சென்னையில் காதலித்து ஏமாற்றியவர் மீது புகார் அளித்தும், போலீசார் நடவடிக்கை எடுக்காததால் கோபமடைந்த பெண், தனது ஒன்றரை வயது குழந்தையுடன் தலைமைச் செயலகம் முன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
