உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

சென்னையில் தனியார் குடோனில் பயங்கர தீ விபத்து – புகை மூட்டத்தில் சிக்கி காவலாளி உயிரிழப்பு

பெரவள்ளூர் தனியார் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் காவலாளி மூச்சுத்திணறி உயிரிழப்பு. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை பெரவள்ளூரில் தனியார் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில், கரும்புகையில் சிக்கிய காவலாளி ராமமூர்த்தி மூச்சுத்திணறி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
சென்னையில் தனியார் குடோனில் பயங்கர தீ விபத்து – புகை மூட்டத்தில் சிக்கி காவலாளி உயிரிழப்பு

 சென்னை பெரவள்ளூர் அகரம் எஸ்.ஆர்.பி. கோவில் சாலையில் தனியாருக்குச் சொந்தமான கட்டிடத்தின் முதல் மாடியில் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் குடோன் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இன்று காலை சுமார் 6.30 மணியளவில் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது குடோனில் இருந்து கரும்புகை வெளியேறுவதைக் கவனித்த அங்கு காவலாளியாகப் பணியாற்றிய ராமமூர்த்தி, தீ எங்கு ஏற்பட்டுள்ளது என்பதைப் பார்ப்பதற்காக உள்ளே சென்றுள்ளார். அப்போது தீ வேகமாகப் பரவி குடோன் முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால், ராமமூர்த்தி வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டார். இதில் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் ராமமூர்த்தியின் உடலை மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், பெரவள்ளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50