திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள கிராமத்தில், தந்தையை இழந்த சிறுமியின் தாய் மணி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், இரவு நேரங்களில் தாய் உறங்கிய பிறகு, மணி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சிறுமி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், 2020ஆம் ஆண்டு ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மணி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இந்த விசாரணையில் மணிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து, தலைமறைவான வளர்ப்புத் தந்தைக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்கவும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி கிடைக்கவும் சட்டத்தின் மூலம் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - வளர்ப்புத் தந்தைக்கு வாழ்நாள் சிறை
சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் வளர்ப்புத் தந்தைக்கு வாழ்நாள் சிறை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே, சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய வழக்கில் வளர்ப்பு தந்தை மணி என்பவருக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றம், அவருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
