திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளைக் குறி வைத்து மேஜிக் மஸ்ரூம் எனப்படும் போதை காளான் விற்பனை அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் சுற்றுலாப் பயணிகளிடம் போதை காளான் விற்பனை செய்யப்படுகிறது.மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் ஏற்கனவே மது, கஞ்சா மற்றும் போதை காளான் பயன்பாடு இருந்து வந்த நிலையில், தற்போது போதை மாத்திரைகள், பவுடர்கள், போதை ஸ்டாம்புகள் மற்றும் போதை சாக்லேட்டுகள் என பல்வேறு வகையான போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பு குறித்த கவலை எழுந்துள்ளது. சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி ரகசியமாக போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
கொடைக்கானலில் இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் மூலம் போதை காளான் விற்பனை – போலீசார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கொடைக்கானலில் சமூக வலைதளங்கள் மூலம் போதை காளான் விற்பனை அதிகரிப்பதாக புகார் எழுந்துள்ளது. விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கு மேஜிக் மஸ்ரூம் உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. விற்பனையாளர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
