தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி அருகே அமைந்துள்ள குற்றாலநாதர் கோவில் அலுவலகத்தில் இருந்த மேஜைக்கு அடியில் 10கிலோ உடும்பு பதுங்கியிருந்ததைப் பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, உடனடியாக வனத்துறையினருக்குத் உடும்பு குறித்து தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், மேஜைக்கு அடியில் பதுங்கியிருந்த உடும்பை மெதுவாக பிடித்தனர். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள குற்றாலத்தில், உடும்பு உள்ளிட்ட வன உயிரினங்கள் அவ்வப்போது மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கு வருவது வழக்கமானது. இதை தொடர்ந்து, பிடிபட்ட உடும்பை பாதுகாப்பாக எடுத்துச் சென்ற வனத்துறையினர், குற்றாலம் வனப்பகுதியில் அதனை பத்திரமாக விடுவித்தனர். இதையடுத்து குற்றால நாதர் கோவில் அலுவலகத்திற்குள் உடும்பு புகுந்த சம்பவம் ஊழியர்களிடமும், அப்பகுதி மக்களிடமும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குற்றாலநாதர் கோவில் வளாகத்தில் புகுந்த உடும்பு
தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி அருகே அமைந்துள்ள பழமையான குற்றாலநாதர் கோவில் அலுவலகத்திற்குள் உடும்பு புகுந்துள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி அருகே அமைந்துள்ள குற்றாலநாதர் கோவில் அலுவலகத்திற்குள் சுமார் 10 கிலோ எடையுள்ள உடும்பு புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Team - Editorial
பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




