கரூர் மாவட்டம் விட்டுக்கட்டியைச் சேர்ந்தவர் இளஞ்சியம். இவர் கால்நடைகளுக்காக லாலாபேட்டை ரயில் நிலையம் அருகே உள்ள வாழைத்தோப்பில் வழக்கமாக புல் அறுக்கச் செல்வது வழக்கம். நேற்று மாலை புல் அறுக்கச் சென்ற அவர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து உறவினர்கள் இரவு முழுவதும் தேடிய நிலையில், இன்று காலை வாழைத்தோப்பு பகுதியில் ரத்தக்கறைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து தேடியபோது, புதர்களுக்கு நடுவே இளஞ்சியம் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது.இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதை தொடர்ந்து, மூதாட்டி அணிந்திருந்த மூக்குத்தி காணாமல் போயிருப்பதால், நகைக்காக கொலை செய்யப்பட்டாரா என்ற பல்வேறு கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் அருகே வாழைத் தோட்டத்துக்கு புல் அறுக்கச் சென்ற மூதாட்டி கழுத்தறுத்து கொலை
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வாழைத்தோப்புக்கு புல் அறுக்கச் சென்ற மூதாட்டி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார்.
கரூர் அருகே வாழைத்தோப்பில் புல் அறுக்கச் சென்ற மூதாட்டி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். நகைக்காக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Team - Editorial
இப்போது வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
