தமிழகத்தில் இருந்து பல்வேறு தொழில் நிறுவனங்கள் தங்களது உற்பத்திப் பொருட்களை கன்டெய்னர்கள் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பி வருகின்றன. குறிப்பாக, கொழும்பு துறைமுகம் வழியாக பல்வேறு நாடுகளுக்கு சரக்குகள் கொண்டு செல்லப்படுகின்றன. இந்நிலையில், கன்டெய்னர்களுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், அவற்றை வாடகைக்கு பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் வரை, தமிழகத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படும் ஒரு கன்டெய்னருக்கான வாடகை ரூ.10,000 லிருந்து 45,000 வரை அதிகரித்துள்ளதாக ஏற்றுமதி நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கன்டெய்னர்கள் கிடைப்பதில் ஏற்படும் தாமதம் காரணமாக சரக்குகளை உரிய நேரத்தில் துறைமுகங்களுக்கு கொண்டு செல்வதிலும் சிக்கல் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள முக்கிய தொழில் மையங்களை ஒருங்கிணைக்கும் வகையில் டிஜிட்டல் கன்டெய்னர் ஒதுக்கீட்டு தளம் ஒன்றை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என ஏற்றுமதி நிறுவனத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த தளத்தின் மூலம், தொழில் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான கன்டெய்னர்களின் எண்ணிக்கை, தேவையான காலம் மற்றும் சரக்கு அனுப்ப வேண்டிய இடம் உள்ளிட்ட விவரங்களை முன்கூட்டியே பதிவு செய்ய முடியும். இதன் மூலம் கன்டெய்னர் தேவையை ஒருங்கிணைத்து நிர்வகிப்பதுடன், தட்டுப்பாடு மற்றும் தேவையற்ற தாமதங்களை குறைக்க முடியும் என ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். கன்டெய்னர் வாடகை மற்றும் சரக்கு கப்பல் முன்பதிவு கட்டண உயர்வுக்கு தீர்வு காண தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஏற்றுமதியாளர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
கன்டெய்னர் வாடகை பல மடங்கு அதிகரிப்பு - தடுமாறும் தமிழக ஏற்றுமதி நிறுவனங்கள்
தமிழகத்தில் இருந்து பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான கன்டெய்னர்கள் வாடகைக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், ஏற்றுமதி நிறுவனங்கள் கவலை அடைந்துள்ளன.
தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான கன்டெய்னர்கள் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கலும், சரக்கு கப்பல்களில் கன்டெய்னர் முன்பதிவுக்கான கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்திருப்பதும் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.


