உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

கணவர் கண்முன்னே பேருந்து மோதி மனைவி பலி

செங்குன்றம் அருகே மாநகரப் பேருந்து மோதிய விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உயிரிழந்தார்.

செங்குன்றம் அருகே மாநகரப் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில், கணவர் கண்முன்னே மனைவி உயிரிழந்தார். பேருந்து ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

Team - Editorial

இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
கணவர் கண்முன்னே பேருந்து மோதி மனைவி பலி

சென்னை செங்குன்றம் அருகே சோழவரம் பெரிய காலனியைச் சேர்ந்தவர் குமார், இவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட தனது மனைவி சாவித்ரியை மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார். அப்போது, கதிர்வேடு அருகே இருசக்கர வாகனம் சென்றபோது, செங்குன்றத்தில் இருந்து பெரம்பூர் நோக்கிச் சென்ற தடம் எண் 242 மாநகரப் பேருந்து, அவர்கள் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சாவித்ரி மீது பேருந்தின் பின்சக்கரம் ஏறியதில், கணவர் கண்முன்னே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், குமார் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து பேருந்து ஓட்டுநர் ராமானுஜத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50