கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் சிப்காட் போலீசார் வழக்கமான வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூருவில் இருந்து கேரளா நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பேருந்தை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில், பேருந்தின் ரகசிய அறையில் சூட்கேஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து பேருந்தில் பயணம் செய்த பயணிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பயணிகளுக்கு கஞ்சா கடத்தலில் தொடர்பில்லை என்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து, பேருந்து ஓட்டுநர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த ஹரிபாஸ்கர், ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த சரவணன் மற்றும் பொள்ளாச்சியைச் சேர்ந்த கிளீனர் தினேஷ்குமார் ஆகியோர் கஞ்சாவைக் கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து மூவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து, போலீசார் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஓசூர் அருகே ஆம்னி பேருந்தில் கஞ்சா கடத்தல் - மூவர் கைது
ஓசூர் அருகே ஆம்னி பேருந்தில் சூட்கேஸில் மறைத்து கஞ்சா கடத்திச் சென்ற ஓட்டுநர் இருவர் மற்றும் கிளீனர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக எல்லையான ஜூஜூவாடி சோதனைச்சாவடியில், ஆம்னி பேருந்தில் சூட்கேஸில் மறைத்து கஞ்சா கடத்திச் சென்ற ஓட்டுநர்கள் இருவர் மற்றும் கிளீனர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




