கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் துணை மாவட்ட ஆட்சியர் கார்த்திக் ராஜா, திருக்கோவிலூர்-ஆசனூர் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக வண்டல் மண் ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டர் டிப்பரை நிறுத்தி சோதனை செய்தார். அந்த சோதனையில் டிராக்டர் டிப்பர் உரிய அனுமதி பெறாததுடன், பதிவு எண்ணும் குறிப்பிடப்படாமல் இருந்தது தெரியவந்தது. மேலும், திருக்கோவிலூர் பெரிய ஏரியில் இருந்து வண்டல் மண் ஏற்றி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து போலீசாருக்கு துணை மாவட்ட ஆட்சியர் தகவல் அளித்துள்ளார். பின்னர், டிராக்டர் டிப்பரை பறிமுதல் செய்து திருக்கோவிலூர் போலீசாரிடம் ஒப்படைத்தார். மேலும், இது குறித்து வி.ஏ.ஓ. தங்கராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிராக்டர் உரிமையாளர் மற்றும் மண் ஏற்றிச் சென்றது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏரியிலிருந்து அனுமதியின்றி வண்டல் மண் கடத்திய டிராக்டர் பறிமுதல்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் ஏரியிலிருந்து அனுமதியின்றி வண்டல் மண் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்தனர்.
திருக்கோவிலூர் பெரிய ஏரியில் இருந்து அனுமதியின்றி வண்டல் மண் ஏற்றி வந்த டிராக்டர் டிப்பரை சப் கலெக்டர் பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைத்தார்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
