உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

இரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் 3 ஆண்டுகள் சிறை - இரயில்வே போலீசார் எச்சரிக்கை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இரயில்களில் பட்டாசுகளை எடுத்துச் செல்ல வேண்டாம் என இரயில்வே போலீசார் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இரயில்களில் பட்டாசுகளை எடுத்துச் செல்ல வேண்டாம் என இரயில்வே போலீசார் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Team - Editorial

பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
இரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் 3 ஆண்டுகள் சிறை: இரயில்வே போலீசார் எச்சரிக்கை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இரயில்களில் பட்டாசுகளை எடுத்துச் செல்ல வேண்டாம் என இரயில்வே போலீசார் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். நவம்பர் 8-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், ஏராளமானோர் சொந்த ஊர்களுக்குச் செல்ல இரயில்களில் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட உள்ளன. பட்டாசுகளில் உள்ள ரசாயனப் பொருட்கள் காரணமாக, சிறிய தீப்பொறி ஏற்பட்டாலும் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இரயில்களிலும் இரயில் நிலைய வளாகங்களிலும் பட்டாசுகள் மற்றும் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில், தடையை மீறி பட்டாசுகளை எடுத்துச் செல்பவர்கள் மீது இரயில்வே சட்டத்தின்படி ரூ.1,000 அபராதம் அல்லது 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சந்தேகத்திற்கிடமான பொருட்கள் தென்பட்டாலோ, யாராவது பட்டாசுகளை எடுத்துச் சென்றாலோ இரயில்வே உதவி எண் 139 அல்லது அருகிலுள்ள இரயில்வே போலீசாரைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, பயணிகள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இரயில்வே விதிமுறைகளைப் பின்பற்றி பயணம் செய்யுமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.  

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50