உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

ஆவின் பால் பொருட்களின் விலை உயர்வு

ஆவின் நிறுவனத்தின் 63 வகையான பால் பொருட்களின் விலை நாளை முதல் உயர்கிறது. மில்க் ஷேக் விலை ₹30-லிருந்து ₹35 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆவின் நிறுவனத்தின் 63 வகையான பால் பொருட்களின் விலைகள் அக்டோபர் 28 முதல் உயர்த்தப்படுகின்றன. 10 வகையான மில்க் ஷேக்குகளின் விலை ₹30-லிருந்து ₹35 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நெய், வெண்ணெய், தயிர் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Team - Editorial

பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
ஆவின் பால் பொருட்களின் விலை உயர்வு

தமிழக அரசின் பால்வளத்துறையின் கீழ் செயல்படும் ஆவின் நிறுவனம், பால் மட்டுமின்றி நெய், வெண்ணெய், மில்க் ஷேக், மைசூர்பா, தயிர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், மூலப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் தயாரிப்புச் செலவுகள் அதிகரித்துள்ளதால், ஆவின் நிறுவனத்தின் 63 வகையான பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வு அக்டோபர் 28-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி, 100 கிராம் நெய் ₹85-லிருந்து ₹95 ஆகவும், 100 கிராம் வெண்ணெய் ₹60-லிருந்து ₹70 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 500 மில்லி ஆவின் நெய் ₹365-லிருந்து ₹400 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 10 வகையான மில்க் ஷேக்குகளின் விலை ₹30-லிருந்து ₹35 ஆகவும், 500 கிராம் தயிரின் விலை ₹35-லிருந்து ₹40 ஆகவும் உயர்ந்துள்ளது. 250 கிராம் மைசூர்பா ₹140-லிருந்து ₹160 ஆகவும், 200 மில்லி லஸ்ஸி ₹20-லிருந்து ₹23 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் இந்த விலை உயர்வு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50